Monday 31 July 2017

TI0042 - Tamizh - On following Quran and Hadith

குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றுதல்


 இறைவனால்  அங்கீகரிக்கப்பட்ட ஒரே மார்க்கம் இஸ்லாம் தான் .
 அல்லாஹ் கூறுகிறான் :
إِنَّ الدِّينَ عِندَ اللَّهِ الْإِسْلَامُ..
 அல்லாஹ்விடம் மார்க்கம் என்பது இஸ்லாமே!
(அல் குர்ஆன் 3:19)
وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ 
 இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை யாரேனும் விரும்பினால் அவரிடமிருந்து அது ஏற்கப்படாது. அவர் மறுமையில் நட்டமடைந்தவராக இருப்பார்.
(அல் குர்ஆன் 3:85)
 அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட இந்த இஸ்லாமிய மார்க்கத்தை அல்லாஹ் தன் வேதமான திருக்குர்ஆன் மூலமும் அவனது தூதர் நபி (ஸல் )அவர்கள் மூலமும் காட்டித் தந்துள்ளான்.
 இந்த இரண்டும் தான் இஸ்லாத்தின் அடிப்படையாகும். இந்த இரண்டை மட்டும் தான் முஸ்லிம்கள் பின்பற்றவேண்டும். இவ்வாறு அல்லாஹ் திருகுர்ஆனில்  ஏராளமான வசனத்தில் குறிப்பிட்டுள்ளான்.
....فَاتَّقُوا اللَّهَ وَأَصْلِحُوا ذَاتَ بَيْنِكُمْ ۖ وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ إِن كُنتُم مُّؤْمِنِينَ
 ..நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்!                                
(அல் குர்ஆன் 8:1)
..وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ۚ وَذَٰلِكَ الْفَوْزُ الْعَظِيمُ
 ..அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி
(அல் குர்ஆன் 4:13)
وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ ۚ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا 
 அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த் தியாகிகளுடனும் நல்லோருடனும் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள்.(அல் குர்ஆன் 4:69)
..وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 ..அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுபவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார்.
(அல் குர்ஆன் 33:71)
 இஸ்லாத்தின் அடிப்படையாக உள்ள , இறைவனின் வாக்கான திருக்குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் வழி முறைகளைப்  பின்பற்றாதவனை திருக்குர்ஆன் கடுமையாக எச்சரிக்கிறது.
وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُّهِينٌ
 அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறுசெய்து அவனது வரம்புகளை மீறுபவனை (அல்லாஹ்) நரகில் நுழையச் செய்வான். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனை உண்டு.      
(அல் குர்ஆன் 4:14)    
.. وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَإِنَّ لَهُ نَارَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا أَبَدًا
 ..அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறுசெய்வோருக்கு நரக நெருப்பு உள்ளது. அதில் என்றென்றும் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
(அல் குர்ஆன் 72:23)
وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَىٰ يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا
 அநீதி இழைத்தவன் (கவலைப்பட்டு) தனது கைகளைக் கடிக்கும் நாளில் "இத்தூதருடன் நான் ஒரு தொடர்பை ஏற்படுத்தியிருக்கலாமே'' என்று கூறுவான்.
(அல் குர்ஆன் 25:27)
 இஸ்லாத்தின் அடிப்படையான திருக்குர்ஆனையும் நபிவழியையும் விட்டுவிட்டு முன்னோர்கள் சொன்னார்கள் என்பதற்காகவோ அல்லது பெரும்பான்மை மக்கள் இவ்வாறு செய்கிறார்கள் என்பதற்காகவே அவற்றைப் பின்பற்றுபவனுக்கு பின் வரும் திருக்குர்ஆன் வசனங்கள் தெளிவான  அறிவுரையை கூறுகிறது.
وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا ۗ أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ
 "அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் "எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்'' என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும், நேர்வழி பெறாமலும் இருந்தாலுமா?        
(அல் குர்ஆன் 2:170)
وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَىٰ مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا ۚ أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْلَمُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ
 "அல்லாஹ் அருளியதை நோக்கியும் இத்தூதரை நோக்கியும் வாருங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் "எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும்'' என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் அறியாமலும், நேர்வழி பெறாமலும் இருந்தாலுமா?
(அல் குர்ஆன் 5:104)
وَإِذَا فَعَلُوا فَاحِشَةً قَالُوا وَجَدْنَا عَلَيْهَا آبَاءَنَا وَاللَّهُ أَمَرَنَا بِهَا ۗ قُلْ إِنَّ اللَّهَ لَا يَأْمُرُ بِالْفَحْشَاءِ ۖ أَتَقُولُونَ عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ
 அவர்கள் வெட்கக்கேடான காரியத்தைச் செய்யும்போது "எங்கள் முன்னோர்களை இப்படித்தான் கண்டோம். அல்லாஹ்வே இதை எங்களுக்குக் கட்டளையிட்டான்'' என்று கூறுகின்றனர். "அல்லாஹ் வெட்கக்கேடானதை ஏவ மாட்டான். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா?'' என்று கேட்பீராக!
(அல் குர்ஆன் 7:28)
يَوْمَ تُقَلَّبُ وُجُوهُهُمْ فِي النَّارِ يَقُولُونَ يَا لَيْتَنَا أَطَعْنَا اللَّهَ وَأَطَعْنَا الرَّسُولَا. وَقَالُوا رَبَّنَا إِنَّا أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَاءَنَا فَأَضَلُّونَا السَّبِيلَا. رَبَّنَا آتِهِمْ ضِعْفَيْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِيرًا
 அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் "நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?'' எனக் கூறுவார்கள். "எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டனர்'' எனவும் கூறுவார்கள்.  "எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக!'' (எனவும் கூறுவார்கள்.)
(அல் குர்ஆன் 33:66-68)
 இதைப் போன்று பெரும்பான்மை கூட்டம் சொல்வதால் ஒரு கருத்து உண்மையானதாக சத்தியமானதாக ஆகி விடாது என்பதையும் திருக்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது  
..وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ - 
 ..எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிந்து கொள்வதில்லை.(அல் குர்ஆன் 7:187)
..وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ يَجْهَلُونَ
 ..எனினும் அவர்களில் அதிகமானோர் அறியாதவர்கள்.
(அல் குர்ஆன் 6:111)
وَمَا يُؤْمِنُ أَكْثَرُهُم بِاللَّهِ إِلَّا وَهُم مُّشْرِكُونَ
 அவர்களில் பெரும்பாலோர் இணை கற்பிப்போராகவே தவிர அல்லாஹ்வை நம்புவதில்லை.
(அல் குர்ஆன் 12:106)
..بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ الْحَقَّ ۖ فَهُم مُّعْرِضُونَ
 ..எனினும் அவர்களில் பெரும்பாலோர் உண்மையை அறிய மாட்டார்கள். அவர்கள் புறக்கணிப்பவர்கள்.
(அல் குர்ஆன் 21:24)
يُلْقُونَ السَّمْعَ وَأَكْثَرُهُمْ كَاذِبُونَ
 அவர்கள் ஒட்டுக் கேட்கின்றனர். அவர்களில் அதிகமானோர் பொய்யர்கள்.
(அல் குர்ஆன் 26:223)
وَإِن تُطِعْ أَكْثَرَ مَن فِي الْأَرْضِ يُضِلُّوكَ عَن سَبِيلِ اللَّهِ ۚ إِن يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ
 பூமியில் உள்ளவர்களில் அதிகமானோருக்கு (முஹம்மதே!) நீர் கட்டுப்பட்டால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழிகெடுத்து விடுவார்கள். அவர்கள் ஊகத்தையே பின்பற்றுகின்றனர். அவர்கள் அனுமானம் செய்வோர் தவிர வேறு இல்லை.
(அல் குர்ஆன் 6:116)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
 என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் (உண்மைக்கு) ஆதரவாளர்களாக இருந்து கொண்டே இருப்பார்கள். இறுதியாக, அவர்கள் மேலோங்கியவர்களாக இருக்கும் நிலையிலேயே அவர்களிடம் இறைக் கட்டளை(யான மறுமைநாள்) வரும்.
அறிவிப்பவர் : முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி)
நூல்: புகாரீ (7311)
In-book reference  : Book 96, Hadith 42
USC-MSA web (English) reference  : Vol. 9, Book 92, Hadith 414
 (deprecated numbering scheme)
http://sunnah.com/bukhari/96/42
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
 இஸ்லாமிய மார்க்கம் புதுமையானதாக (ஆரம்பத்தில், மக்கள் மனதில்) தோன்றியது. முன்னால் தோன்றியது போலவே புதுமையானதாக (பிற்காலத்திலும்)தோன்றும். (அந்த) புதுமைவாதிகளுக்கு நற்செய்தி உண்டாகட்டும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல் :முஸ்லிம் (208)
Reference  : Sahih Muslim 145
In-book reference  : Book 1, Hadith 279
USC-MSA web (English) reference  : Book 1, Hadith 270
 (deprecated numbering scheme)
http://sunnah.com/muslim/1/279
 முன்னோர்கள் சொன்னதற்கும் செய்ததற்கும் மாற்றமாக இருக்கிறது, முரணாக இருக்கிறது என்பதற்காகவோ ஒரு கருத்தை மறுக்கக் கூடாது. எந்த கருத்தாக இருந்தாலும் அது திருக்குர்ஆன் நபிமொழிக்கு ஒத்ததாக இருக்கிறதா? அல்லது முரணாக இருக்கிறதா? என்பதைப் பார்த்து, திருக்குர்ஆனுக்கும்  நபிமொழிக்கும் ஒத்து இருக்கும் கருத்தை ஏற்று , முரணாக இருக்கும் கருத்தைப் புறக்கணிக்க வேண்டும்.
  நமக்கு மத்தியில் பிரச்சனைகள் ஏற்படும் போது திருக்குர்ஆனையும் நபிமொழியையும் வைத்தே ஏக்கருத்து சரியானது என்பதை முடிவு செய்ய வேண்டும். இவ்வாறே திருக்குர்ஆன்  வழிகாட்டுகிறது.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنكُمْ ۖ فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ۚ ذَٰلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا
 நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.
(அல் குர்ஆன் 4:59)
فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّىٰ يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا
 (முஹம்மதே!) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள்.
(அல் குர்ஆன் 4:65)
إِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِينَ إِذَا دُعُوا إِلَى اللَّهِ وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ أَن يَقُولُوا سَمِعْنَا وَأَطَعْنَا ۚ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ
 அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும்போது "செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்'' என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
(அல் குர்ஆன் 24:51)
 அல்லாஹ் காட்டிய இந்த அற்புதமான வழிமுறைகளை விட்டு விட்டு யார் சொன்னாலும் அதை மார்க்கமாக எடுத்துச் செயல்பட்டால் அதற்கு கூலி கிடைக்காததோடு தண்டனையும் கிடைக்கும்.
..الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا ۚ فَمَنِ اضْطُرَّ فِي مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِّإِثْمٍ ۙ فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ 
 ..இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.
(அல் குர்ஆன் 5:3)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
 நான் உங்களை (மார்க்கம் )வெண்மையான(தாக இருக்கும் )நிலையில் விட்டு செல்கின்றேன். அதனுடைய இரவும் பகலைப் போன்றதாகும். அழியக் கூடியவனைத் தவிர வேறு யாரும் எனக்குப் பிறகு அதை விட்டு வழி தவற மாட்டார்கள் .
அறிவிப்பவர்: இர்பாள் பின் ஸாரியா(ரலி)
நூல் : அஹ்மத்  (16519)
Book: Sunan Ibn Majah
Grade : Sahih (Darussalam)
English reference  : Vol. 1, Book 1, Hadith 43
Arabic reference  : Book 1, Hadith 45
http://sunnah.com/urn/1250430
 மார்க்கம் என்பது நாயகம்(ஸல்) அவர்களோடு முழுமைப்படுத்தப்பட்டு விட்டது. இனி இம்மார்க்கத்தில் ஒன்றைக் கூட்டுவதற்கோ, குறைப்பதற்கோ யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது.
 இவ்வாறு நாயகம் (ஸல்)அவர்கள் காட்டி தராத வழிமுறைகளைப் பின்பற்றுவது அல்லாஹுவுக்கு   இம்மார்க்கத்தைக்  கற்றுக் கொடுப்பது போன்றதாகும். அதாவது, அல்லாஹ் முழுமைப்படுத்திய மார்க்கம் எங்களுக்குப் போதாது. இன்னும் பல விஷயங்கள் உள்ளன என்று கூறுவதைப் போன்றதாகும்.
அல்லாஹ் கேட்கிறான் :
قُلْ أَتُعَلِّمُونَ اللَّهَ بِدِينِكُمْ وَاللَّهُ يَعْلَمُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۚ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
 உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்று கூறுவீராக!
(அல் குர்ஆன் 49:16)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
 நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல் : புகாரீ  (2697)
Reference  : Sahih al-Bukhari 2697
In-book reference  : Book 53, Hadith 7
USC-MSA web (English) reference  : Vol. 3, Book 49, Hadith 861
 (deprecated numbering scheme)
http://sunnah.com/bukhari/53/7
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
  “நம் கட்டளையில்லாத காரியத்தை யார் செய்கிறாரோ ,அது (அல்லாஹ்வால் )மறுக்கப்படும்.”
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம் (3243)
http://www.tamililquran.com/muslimdisp.php?start=3541
Reference  : Sahih Muslim 1718 b
In-book reference  : Book 30, Hadith 24
USC-MSA web (English) reference  : Book 18, Hadith 4267
http://sunnah.com/muslim/30/24
  நாயகம் (ஸல் )அவர்கள் காட்டித்தந்த வழிமுறைகளைப்  பின்பற்றாமல் தனது மனோ இச்சைப்படி பித்அத்தான  காரியங்களை செய்பவனின் நிலை என்னவாகும் என்பதை அல்லாஹ் தன் திருமறையில் அற்புதமாக விளக்குகின்றான்.
قُلْ هَلْ نُنَبِّئُكُم بِالْأَخْسَرِينَ أَعْمَالًا. الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا. أُولَٰئِكَ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِ رَبِّهِمْ وَلِقَائِهِ فَحَبِطَتْ أَعْمَالُهُمْ فَلَا نُقِيمُ لَهُمْ يَوْمَ الْقِيَامَةِ وَزْنًا. ذَٰلِكَ جَزَاؤُهُمْ جَهَنَّمُ بِمَا كَفَرُوا وَاتَّخَذُوا آيَاتِي وَرُسُلِي هُزُوًا.
 "செயல்களில் நட்டமடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?'' என்று கேட்பீராக! இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீணாகி விட்டது. அவர்களோ தாங்கள் அழகிய செயல் புரிவதாக நினைக்கின்றனர். அவர்களே தமது இறைவனின் சான்றுகளையும், அவனது சந்திப்பையும் மறுத்தவர்கள். அவர்களின் நல்லறங்கள் அழிந்து விட்டன. எனவே கியாமத் நாளில் அவர்(களின் செயல்)களுக்கு எந்த எடையையும் ஏற்படுத்த மாட்டோம். அவர்கள் (என்னை) மறுத்ததற்கும், எனது வசனங்களையும், தூதர்களையும் கேலியாக ஆக்கியதற்கும் இந்த நரகமே உரிய தண்டனை.
(அல் குர்ஆன் 18:103-106)
 எனவே தான், நாயகம் (ஸல்)அவர்கள் பித்அத்தான காரியங்களை விட்டும் எச்சரிக்கை செய்கிறார்கள் .
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
 செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல் )அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில் )புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும்.ஒவ்வொரு  பித்அத்தும்  வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல் : நஸயீ  (1560)
Reference  : Sunan an-Nasa'i 1578
In-book reference  : Book 19, Hadith 23
English translation  : Vol. 2, Book 19, Hadith 1579
http://sunnah.com/nasai/19/23
 இன்று நம் சமுதாயத்தில் குர்ஆனுக்கும் நபி வழிக்கும் மாற்றமான எத்தனையோ புதுமையான நடைமுறைகள் காணப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை காண்போம் :
1. பாங்குக்கு முன் ஸலவாத் கூறுவது
2.ஜுமுஆவில் இரண்டு பாங்கு கூறுதல்
3.தொழுகைக்குப் பின் கூட்டு துஆ ஓதுதல்
4.ஷாபான் பிறை 15, ரஜப் பிறை 27 இரவுகளில் நின்று வணங்கி பகலில் நோன்பு நோற்றல்
5.இறந்தவருக்கு 40 நாட்கள் தொடர்ந்து பாத்திஹா ஓதுதல்
6.வருடாந்திர பாத்திஹா ஓதுதல், மவ்லீது ஓதுதல், மீலாது விழா கொண்டாடுதல்
 இதைப் போன்ற எத்தனையோ செயல்கள் மார்க்கத்தின் பெயரால் நபி(ஸல்) அவர்களின் அங்கீகாரம் இல்லாமல் நடைமுறைப் படுத்தப்படுகிறது. இவற்றிற்கும் நன்மை கிடைக்காது என்பதோடு தண்டனையும் உண்டு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
 அது மட்டுமல்ல, மத்ஹபு ரீதியாகவும் சமுதாயம் பிரிந்து கிடக்கின்றனர். ஷாபி, ஹனபி, ஹன்பலி, மாலிகி என்று பல பிரிவுகளாகப் பிரிந்து மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்களை மார்க்கம் என்ற பெயரில் செய்கின்றனர்.
 நான்கு மத்ஹபில் உள்ள எத்தனையோ சட்டங்கள் குர்ஆனுக்கும் நபிவழிக்கும் மாற்றமாக இருந்தாலும் குர்ஆன் சுன்னாவை தூக்கி எறிந்து விட்டு மத்ஹபுகளைப் பின்பற்றக்கூடிய அவல் நிலையையும் காண்கிறோம்  
 அல்குர்ஆனும்  நபிவழியும் மார்க்கம் என்பதை அறியாததினால் தான் இந்நிலை காணப்படுகிறது. நாம் நம்முடைய வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் குர்ஆனையும் நபிவழியையும் மட்டுமே பின்பற்றி நடக்க வேண்டும்.
 தட்டச்சுப் படி: உம்மு அப்துல் பாரி
மூலம்: இஸ்லாமிய அடிப்படை கல்வி (Islamiya Adippadai Kalvi) book, குரான், ஹதீஸை பின்பற்றுதல், page#81

No comments:

Post a Comment